லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நேர்காணலை பிரபல தொகுப்பாளர் DD தொகுத்து வாங்கினார். நேர்காணல் மிகவும் சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், DD-க்கு மலர்க்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பில், "இந்த சிறப்பான நேர்காணலுக்கு மிக்க நன்றி DD MAM " என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த அன்பான பரிசைக் கண்டு நெகிழ்ந்துபோன தொகுப்பாளர் DD, அந்த மலர்க்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணல் குறித்து லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுடன் பணிபுரிவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம் DD! இதேபோல் நாம் இணைந்து இன்னும் பல வெற்றிகரமான திட்டங்களை உருவாக்க வாழ்த்துகள்" என DD -யைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகக் கால் பதித்துள்ளார்.
இவரது முதல் பட நேர்காணல் மற்றும் டிடி-யின் இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.