சினிமா செய்திகள்

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ - முதல் பாடல் வெளியானது!

படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் , ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது. படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.