சினிமா செய்திகள்

இசையமைப்பாளரான பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ்

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன், இசையமைப்பிலும் தனது தனித்துவத்தைப் பதிவு செய்யத் தயாராகியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசையமைப்பாளராகப் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தமிழில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, ‘அசல்’ படத்தின் ‘தொட்டடெய்ங்’, ‘ஐயா’ படத்தின் ‘அதிரி பதிரி’, ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘இந்த நிமிடம்’, ‘பிறப்பு’ படத்தின் ‘உலக அழகி நான்தான்’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

சுயாதீன இசைப் பயணம்

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன், இசையமைப்பிலும் தனது தனித்துவத்தைப் பதிவு செய்யத் தயாராகியுள்ளார்.

இதன் முதல் படியாக, டிவோ மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசைப் படைப்பை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் பாடகி என்ற அடையாளத்தைக் கடந்து, இசையமைப்பாளராகவும் புதிய பரிமாணத்தில் பயணிக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைப் பாரம்பரியத்துடன், தனது தனித்துவமான இசைப் பாணியையும் இணைத்து ஜனனி உருவாக்கவுள்ள புதிய படைப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரது சுயாதீன இசைப் பயணம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

SCROLL FOR NEXT