நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டாவது படம் 'ஜெயிலர் 2'. ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ஜெயிலர் 2 உருவாகி உள்ளது.
படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.