சினிமா செய்திகள்

வெளியானது 'ஜெயிலர் 2'... ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.58.92 கோடி முன்பதிவு வசூலுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ‘ஜெயிலர் 2’ படத்தை அப்படத்தில்நடித்த நடிகர்கள், இசை அமைப்பாளர் அனிருத், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் திரையரங்குகளில் ரசிகர்களுடன் காண வருகை தந்தனர்.

‘ஜெயிலர் 2’ படம் டிக்கெட் முன்பதில் ரூ.58.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்தது.

ஜெயிலர் 2

இப்படத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால் , மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT