சினிமா செய்திகள்

‘ஜெயிலர் 2’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.620 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்-2' உலகளவில் முதல் இரண்டு நாட்களில் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்துடன், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்-2' திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. மோகன்லால், சிவராஜ் குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப்படம் தமிழகத்தில் 1,200 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் 14 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசானது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

வசூல்

வெளியான முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ. 125 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 210 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிகத்தீவிரமாக லாபத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

வார இறுதி நாட்களோடு சேர்த்து வரவிருக்கும் ஆயுத பூஜை விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், படத்தின் வசூல் மேலும் பல கோடிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.620 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT