சினிமா செய்திகள்

நாளை வெளியீடு... முன்பதிவில் ரூ.58 கோடிக்கு மேல் வசூலித்த ‘ஜெயிலர் 2’!

இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

இந்நிலையில் இப்படம் டிக்கெட் முன்பதில் ரூ.58.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் காட்சிகளுக்கு மட்டும் ரூ.31.70 கோடி வசூலானதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நாள் வசூல் முறையே 8.04 கோடி, 7.80 கோடி மற்றும் 7.28 கோடி ரூபாய் ஆகும்.

ஜெயிலர் 2

இப்படத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால் , மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT