சினிமா செய்திகள்

'வட சென்னை 2' குறித்து புது அப்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்

‘வடசென்னை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான படம் ‘வட சென்னை’. இப்படத்தில் நடிகர்கள் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி நடிகைகள் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

‘வடசென்னை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்போது புது தகவலை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஐசரி கணேஷ் கூறுகையில்,

கடந்த ஏப்ரல் மாதம் ‘கர’ படம் வெளியானது. வருகிற 3-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாகும். பின்னர், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ‘டயங்கரம்’ வெளியாகும். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் (post-production) நடைபெற்று வருகின்றன.

இதில் நான் எந்தவொரு சிறப்புத் தோற்றத்திலும் (cameo) நடிக்கவில்லை. தலைப்பு அறிவிப்பு வீடியோவில் மட்டுமே பங்கேற்றேன். மாரி செல்வராஜ் இயக்கத்திலான #D56 படத்திற்கான படப்பிடிப்பை செப்டம்பர் முதல் தொடங்கவுள்ளோம். இது முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஒரு திரைப்படமாக இருக்கும்.

அதன் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள ‘வட சென்னை 2’ படத்திற்கான பணிகளைத் தொடங்குவோம் என்றார்.