சினிமா செய்திகள்

திரைப்படங்களில் "ரங்கராஜன்" என்ற பெயரை பயன்படுத்த தடை உள்ளதா: டீசல் பட இயக்குநர்

என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட ரங்கராஜ் பாண்டே-க்கும் CBFC-க்கும் என்ன தொடர்பு. ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடங்காதே திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது.

மாலை மலர்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதையடுத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதேபோல பல படங்கள் தணிக்கை சான்றிதழ் காரணமாக் வெளியாவதில் கால தாமதம் ஆகிறது.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடங்காதே என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சண்முகம் முத்துசாமி இயக்கினார். இந்த படம் அதிரடி, காதல், அரசியல் சார்ந்த விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 27, 2025-ல் வெளியானது.

இந்நிலையில் அடங்காதே திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கொடுக்காதது குறித்து அந்த படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்,

என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட ரங்கராஜ் பாண்டே-க்கும் CBFC-க்கும் என்ன தொடர்பு என விவரம் அறிந்த பாஜக நண்பர்கள் சொல்ல முடியுமா…?

அடங்காதே திரைப்பட தணிக்கையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு பதில் தெரியுமா…?

திரைப்படங்களில் "ரங்கராஜன்" என்ற பெயரை பயன்படுத்த 2020 ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகள் தடை ஏதேனும் விதித்துள்ளதா… என அந்த பதிவில் கூறியிருந்தார்.

என் மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட @RangarajPandeyR அவர்களுக்கும் CBFC க்கும் என்ன தொடர்பு என விவரம் அறிந்த பாஜக நண்பர்கள் சொல்ல முடியுமா…?#adangathey #அடங்காதே திரைப்பட தணிக்கையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு பதில் தெரியுமா…?… pic.twitter.com/9UnZLH0JLC