சினிமா செய்திகள்

ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் நட்சத்திர ஓட்டலாக மாறுகிறதா?

1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் தான் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். ரசிகர் மன்ற பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொள்வார்.

ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் உள்ள இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட இருப்பதாக ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கிறது.

1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் தான் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். ரசிகர் மன்ற பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொள்வார். இன்னும் சொல்லப்போனால் இந்த மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தான் அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் உள்ள இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட இருப்பதாக ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டபத்தை இடித்துவிட்டு ரஜினிகாந்த் ஓட்டல் கட்டப்போகிறாரா? அல்லது வேறு ஏதாவது கட்டுமான நிறுவனம் அந்த ஓட்டலை கட்டப்போகிறதா? என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

SCROLL FOR NEXT