சினிமா செய்திகள்

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அவதாரம்? - சேலத்தில் புதிய ரசிகர் மன்றம்

முதல் படத்திலேயே அவரது இயக்கும் திறமை மற்றும் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு சினிமா வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றது.

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமானதுடன், நடிகராகவும் களமிறங்க உள்ளார். சேலத்தில் அவரது ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த தீவிரமாக செயல்படுகின்றன.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருந்து தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் சந்தீப் கிஷன் நடித்த ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அவரது முதல் படத்திலேயே அவரது இயக்கும் திறமை மற்றும் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு சினிமா வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றது.

சேலத்தில் ரசிகர் மன்றம்

இயக்குனராகத் தன் பயணத்தைத் தொடங்கிய ஜேசன் சஞ்சய், அடுத்தகட்டமாக நடிகராக அவதாரமெடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் அவரை கதாநாயகனாக களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் ஜேசன் சஞ்சய் பெயரில் சேலத்தில் ரசிகர் மன்றமும் உருவாகி உள்ளது. இது மட்டுமின்றி பிரபல நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஜேசன் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டார். அவரை ஹீரோவாக களமிறக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் நடித்த கேரக்டர்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேசன் சஞ்சயின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

SCROLL FOR NEXT