அனிருத் 
சினிமா செய்திகள்

அடேங்கப்பா... அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் எனும் மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டுள்ளது.

அனிருத்திற்குப் பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் 'டி.சி.' திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்து கதாநாயகனாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'AA23' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 23-வது படமாக உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

அனிருத்துக்கு ரூ. 20 - 23 கோடி வரை சம்பளம்?

இந்நிலையில், இப்படத்திற்காக அனிருத்திற்குப் பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவல்களின்படி, அனிருத்துக்கு ரூ.20 கோடி முதல் ரூ. 23 கோடி வரை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது இந்திய அளவில் ஒரு இசையமைப்பாளருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாகும்.

அனிருத்தின் கைவசம் உள்ள முன்னணி படங்கள்

அனிருத் இசையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது தவிர 'அரசன்', 'கிங்', 'பாரடைஸ்' மற்றும் 'தர்மன்' போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்களையும் அவர் தனது கைவசம் வைத்துள்ளார். அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் எனும் மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டுள்ளது.