’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டூம்ஸ்டே டிரெய்லரில் அயர்ன் மேன் கதாபாத்திரம் கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. கடைசியாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் உயிரிழப்பது போல காட்டப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த டிரெய்லர் மூலம் மீண்டும் மார்வெல் உலகில் நுழைந்துள்ளார். அதில் தான் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்விஸ்ட் காத்திருக்கிறது. இதுவரை டோனி ஸ்டார்க்காக கலக்கி வந்த அயர்ன் மேன் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். ’அயர்ன் மேன்’ கதாபாத்திரம் குறித்து இயக்குநர் ஜோ ரூஸோ கூறுகையில், ”அவர் சாதாரண வில்லன் கிடையாது. மார்வல் யுனிவர்சில் மிகக் கடினமான வில்லன்களின் ஒருவர்” என்றார்.
மார்வெல் யுனிவர்சில் அயர்ன் மேன் முக்கிய சூப்பர் ஹீரோவாக வலம் வந்த நிலையில், டூம்ஸ்டே படத்தில் கொடூர வில்லனாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நடிகர் கிறிஸ்டியன் எவான்ஸ் மீண்டும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
மேலும், ‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ மற்றும் ‘தண்டர்போல்ட்ஸ்’ பட கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ‘தோர்’, ‘எக்ஸ் மேன்’ போன்ற கேரக்டர்களும் இப்படத்தில் முக்கிய பங்காற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதவிர ’ஸ்பைடர் மேன்’ டூம்ஸ்டே படத்தில் இடம்பெறுவாரா என்பது ரசிகர்களின் கேள்விக்குறியாக உள்ளது. டிரெய்லரில் அவரது கதாபாத்திரம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
கடைசியாக ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்ட உள்ளது. அந்த படத்தின் இறுதியில் டூம்ஸ் டே படத்திற்கு முன்னோட்டமாக 7 நிமிட காட்சிகள் இடம்பெறவுள்ளது.’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த், ஆண்டனி மெக்கி, ராபர்ட் டவுனி ஜூனியர், வனிஸா கிர்பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக ரூஸோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.