சினிமா செய்திகள்

ரவி தேஜாவின் 'இருமுடி ' படத்தின் முதல் பாடல் 'இருமுடி கட்டு' வெளியீடு!

"இருமுடி கட்டு"லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில், 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'இறுமுடி'.

இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் பேபி நக்ஷத்ரா, சாய் குமார், அஜய் கோஷ், சுவாசிகா விஜய் மற்றும் ரமேஷ் இந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான "இருமுடி கட்டு"லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ள வரிகளுக்கு, பிரபல பாடகர் அனந்து இப்பாடலை பாடியுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'இருமுடி' திரைப்படம், வரலக்ஷ்மி விரத தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.