சினிமா செய்திகள்

இந்தியன் 2 'நீலோற்பம்' பாடல் நாளை வெளியீடு

. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.இப்பாடலிற்கு 'நீலோற்பம்' என தலைப்பு வைத்துள்ளனர்.

28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலை மே 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்து போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டனர்.

இப்பாடலிற்கு 'நீலோற்பம்' என தலைப்பு வைத்துள்ளனர். பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. முழுப் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.