சினிமா செய்திகள்

"இம்மார்ட்டல்" படத்திற்கு முக்கியத்துவம் தரவில்லையா?- பட புரமோஷனில் பங்கேற்காதது குறித்து கயாடு லோகர் விளக்கம்

படத்தின் கதாநாயகியான கயாடு லோகர் புரேமோஷன் விழாவில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிராகன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கயாடு இன்று வெளியாகி உள்ள ‘இம்மார்ட்டல்’, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இம்மார்ட்டல் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த வாரம் முதல் தீவிரமாக நடந்து வந்த நிலையில் படத்தின் கதாநாயகியான கயாடு லோகர் புரேமோஷன் விழாவில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் கூறும்போது:-

ஏன் இதைப்பற்றி பேச தொடங்கியுள்ளனர் என எனக்கு தெரியவில்லை. ‘ஐ ஆம் கேம்’ புரமோஷனுக்கு ஒரு நாள் கிடைத்தது.

ஆனால், இம்மார்ட்டல் படக்குழுவினரிடம் அந்த தேதி இல்லை. அடுத்து ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றேன். அதனால் இம்மார்ட்டல் பட விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த படம் முக்கியம்.

அந்த படம் முக்கியம் என்பது போல் சித்தரித்து விமர்சனங்களை கொடுக்கிறார்கள். பரவாயில்லை எனக்கு இது பழகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.