சினிமா செய்திகள்

சிவாஜி கணேசன் பேரன் நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா! | Ilaiyaraaja

சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லெனின் பாண்டியன்.

இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல் ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ‘லெனின் பாண்டியன்’ படம் இளையராஜா இசையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.