சினிமா செய்திகள்

VIDEO-பாடகி எஸ்.ஜானகி மறைவு இந்திய இசை உலகிற்கு மாபெரும் இழப்பு: இளையராஜா இரங்கல்!

தனது வாழ்நாளில் எத்தனை எத்தனையோ தாங்க முடியாத துக்கங்களை தாங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்குத் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகி எஸ்.ஜானகியுடன் இணைந்து எண்ணற்ற எக்காலமும் அழியாத காவியப் பாடல்களைத் தந்த மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

பெருமதிப்பிற்குரிய ஜானகி அம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். அவர், தனது வாழ்நாளில் எத்தனை எத்தனையோ தாங்க முடியாத துக்கங்களை தாங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்.

உலக கம்போஷர்கள், மாமேதை அவர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமானதாக இருந்திருக்கிறது என்பதுதான் இதுவரை நடந்திருக்கிறது.

ஜானகி அம்மா தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒர்வொரு பாடலிலும் நிரூபித்துக்கொண்டே இருப்பார். மிகவும் கடினமான உழைப்பாளி.

நான் ஒரு பாடலை உருவாக்குவதற்கு ஒவ்வொரு வாத்தியத்தையும் எவ்வளவு அக்கறையோடு அதல் விடாப்பிடியாக நான் நினைத்ததை வரவைப்பேனோ அதே போல அவர்களுக்கு சொல்லி கொடுத்த அந்த பாடலை அவரும் விடாப்பிடியாக வரவைப்பார்.

அவர் ஒரு சிறந்த கம்போஷர். பஜன் பாடல்களை நிறைய எழுதியிருக்கிறார். மேலும், இந்தியத் திரைப்பட இசை உலகிற்கு இது ஒரு பேரிழப்பு என்றும், அவர் ஒரு மிகச்சிறந்த கடின உழைப்பாளி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT