சினிமா செய்திகள்

நாளை காலை 11 மணிக்கு இட்லி கடை படத்தின் அடுத்த பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கிறார்.அக்டோபர் 1ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலமான என் பாட்டன் சாமி வரும் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT