சினிமா செய்திகள்

'தவறாகப் பேசிவிட்டேன்' ராமாயணா பட விழாவில் ரன்பீர் கபூர் விளக்கம்

ரன்பீரின் இந்த மன்னிப்புக் கோரும் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்ற விஜயதசமி திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரன்பீர், தான் வாய் தவறி பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ராமாயணா' திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற விஜயதசமி திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரன்பீர் கபூர், தீமைக்கும் நன்மைக்கும் இடையிலான போராட்டம் குறித்துப் பேசும்போது தவறுதலாகப் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தீமை எவ்வளவுதான் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் இறுதியில் உண்மையும் நன்மையும் முடிவுக்கு வரும் என்ற பொருளில் அவர் வாய் தவறிப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. வரவிருக்கும் 'ராமாயணா' படத்தில் ராமராக நடிக்கும் ஒரு முக்கிய நடிகர் இவ்வாறாகப் பேசியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தவறு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற 'ராமாயணா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரன்பீர் கபூர் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். நிகழ்வில் பேசிய அவர், கொல்கத்தா விழாவில் எதிர்பாராத விதமாக வாய் தவறித் தவறுதலாகப் பேசிவிட்டதாகவும், தான் சொல்ல வந்த கருத்து அதுவல்ல என்றும் விளக்கமளித்தார். தீமை எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் இறுதியில் உண்மையும் நன்மையும் மட்டுமே வெல்லும் என்பதே தான் கூறவந்த உண்மையான கருத்து என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து தனது தவறை நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், தனது திரைப்படமான 'ராக்பெத்தார்' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற "ஜோ பி மை kehna chahu, பார்பாத் கரே alfaz mere" என்ற பாடலின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். தான் என்ன சொல்ல நினைத்தேனோ அதைச் சரியாக வெளிப்படுத்த முடியாமல் தனது வார்த்தைகளே தனக்கு எதிராக அமைந்துவிட்டதாகக் கூறி அனைவரிடமும் மன்னிப்பையும் கோரினார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரன்பீரின் இந்த மன்னிப்புக் கோரும் வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT