சினிமா செய்திகள்

சமீபத்தில் படம் தொடர்பாக விஜய்யை சந்தித்தேன்.. சிறுத்தை சிவா

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் சிவா. தற்போது இவர் இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. கங்குவா படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தவிர திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சிவா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். விஜய் படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கும் இயக்குநர் சிவா பதில் அளித்தார்.

"நான் பலமுறை விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறேன். படம் எடுப்பதற்கு கதையையும் கூறியிருக்கிறேன். படம் தொடர்பாக நிறைய சந்திப்புகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன். ஆனால் சரியான காலம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்," என்று இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.