சினிமா செய்திகள்

நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்: தற்கொலைக்கு முன் மகள்களிடம் பேசிய அனில் அரோரா

அனில் அரோரா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அனில் அரோரா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகள்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அனில் அரோரா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகள்களிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

'நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன், சோர்வாக இருக்கிறேன் என்று அனில் அரோரா தனது மகள்களான நடிகைகள் மலைகா அரோரா மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்