சினிமா செய்திகள்

ஜான்வி கபூரின் போலி ஆபாச வீடியோ: ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு

ஏ.ஐ.யை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கடுமையான நிபந்தனைகளை கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜான்வி கபூரின் 'தேவரா' பட பாடல் காட்சிகளை ஏ.ஐ. மூலம் மாற்றி ஆபாசமாக வெளியிட்ட விவகாரம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட படம் 'தேவரா'. இந்த படத்தில் வரும் 'சுட்டமல்லி...' என்ற பாடல் பெரிய அளவில் 'ஹிட்'டானது. பாடலில் ஜான்வி கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார்.

கண்டனம்

இந்தப் பாடல் காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்' செய்து ஆபாசம் தெறிக்கும் வகையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் ஏ.ஐ.'யை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கடுமையான நிபந்தனைகளை கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT