சினிமா செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் 'ஜெயிலர் 2' நடிகைக்கு உயர்நீதிமன்றம் சம்மன்

சுமார் ரூ.200 கோடி பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா பதேஹிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகுமாறு நோரா பதேஹிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி அவர் நவம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் நோரா பதேஹி அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு

பாலிவுட் வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மீது பல மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதில், 2020-21 ஆம் ஆண்டுக்கு இடையில் டெல்லியின் சிறையிலிருந்தபடியே மருந்து தயாரிப்பு நிறுவனமான Ranbaxy உடைய முன்னாள் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கை குறிவைத்து, அவரது கணவரை சிறையிலிருந்து விடுவிப்பதாக உறுதியளித்து அவரிடமிருந்து சுமார் ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஒரு பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை சுகேஷ் நடத்தி இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு இந்த விவகாரத்தை விசாரித்தது.

நோரா பதேஹி விளக்கம்

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னதாக நோரா பதேஹியிடம் விரிவாக விசாரணை நடத்தியிருந்தனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164இன் கீழ் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

தனக்கு சுகேஷுடன் நேரடியாகப் பழக்கம் இல்லை என்றும், அவரது மனைவி லீனா மரியா பால் மூலமாகவே அவரிடம் பேசியதாகவும் நோரா அதிகாரிகளிடம் கூறினார்.

2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் தான் தொழில் ரீதியாக மட்டுமே கலந்துகொண்டதாகவும் அவர் விளக்கினார்.

நோரா பதேஹி கடைசியாக ஜெயிலர் 2 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT