சினிமா செய்திகள்

‘எங்களுக்காக பாடல் பாடினார்’ - நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளுடன் முதல் சந்திப்புக் கூட்டம் நடத்திய தனுஷ்... வெள்ளி காமாட்சி விளக்கு பரிசு!

அண்மையில் ரசிகர் மன்றம், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது.

நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அதன் ஒரு பகுதியாக தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தகவல்கள் வெளிவந்தவாறே இன்று தனது இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு தலா ஒரு வெள்ளி காமாட்சி விளக்கையும் பரிசாக வழங்கியுள்ளார்.

முதல் சந்திப்பு

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று தனது நற்பணி இயக்கத்தின் முதல் மகளிர் அணி சந்திப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் தனுஷ் இரண்டே நிமிடங்கள் மட்டும் பேசியதாகவும், பாடல் பாடியதாகவும், அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் வெளியே வந்த பெண் நிர்வாகிகள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆண் ரசிகர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏன் திடீர் அரசியல் பிரவேச பேச்சு?

சினிமாத்துறையில் இருந்து வந்த நடிகர் விஜய், தான் கட்சித் தொடங்கி, சந்தித்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் கட்சித் தொடங்க உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் இந்நடிகர்களின் திடீர் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும், அவற்றில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுமே.

இந்த யூகங்களுக்கு மத்தியில் அண்மையில் தனது ரசிகர்கள் மன்றத்தை ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என மாற்றி, புதிய கொடி மற்றும் இலச்சினையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்தச் சூழலில் நடைபெற்ற முதல் மகளிர் அணி கூட்டம் என்பதால், தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் இந்த நிகழ்வு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT