சினிமா செய்திகள்

ஹீ-மேன் (Masters of the Universe)- திரை விமர்சனம்

டேனியல் பெம்பர்டன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

Maalaimalar

கதை

பூமியில் சாதாரண வாழ்க்கை வாழும் இளவரசர் ஆடம், தனது சொந்த உலகமான எட்டர்னியாவுக்கு திரும்புகிறார். அங்கு கொடூரமான ஸ்கெலிட்டர் ஆட்சியை கைப்பற்றி இருப்பதை அறிகிறார். தனது உண்மையான அடையாளத்தை ஏற்று ஹீ-மேனாக மாறும் ஆடம், தனது நண்பர்களுடன் இணைந்து உலகத்தை காப்பாற்ற போராடுகிறார்.

இறுதியில் இந்த போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

ஹீ-மேனாக நடித்துள்ள நிக்கோலஸ் காலிட்சைன் கதாபாத்திரத்திற்கு தேவையான கம்பீரத்தையும், உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சாதாரண இளைஞனில் இருந்து சக்திவாய்ந்த போர்வீரனாக மாறும் பயணத்தை நம்பும்படியாக நடித்திருக்கிறார்.

வில்லனாக வரும் ஜாரெட் லெட்டோ, ஸ்கெலிட்டர் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். அவரது தோற்றமும், திரையில் வரும் விதமும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இயக்கம்

இயக்குநர் டிராவிஸ் நைட், பழைய ஹீ-மேன் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் நிறைய நினைவுகளை சேர்த்திருக்கிறார். அதே சமயம் புதிய தலைமுறையினருக்கும் புரியும் வகையில் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் அதன் காட்சியமைப்பு.

எட்டர்னியா உலகம், அரண்மனைகள், போர்க்களங்கள், மாய உலகங்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரிய திரையில் பார்க்கும்போது அந்த அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் படம் முழுமையாக குறையற்றது என்று சொல்ல முடியாது. சில இடங்களில் திரைக்கதை நீளமாக தோன்றுகிறது. குறிப்பாக முதல் பாதியில் வரும் சில காட்சிகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன.

இசை  

டேனியல் பெம்பர்டன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

ஒளிப்பதிவு

ஃபேபியன் வாக்னர் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.