இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் 'ஹர்திக் பாண்டியா', ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தனது காதலியான மாடல் அழகி 'மஹிகா சர்மாவுடன்' சேர்ந்து இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதிக்கு வருகை தந்த ஹர்திக் பாண்டியா, தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக மொட்டை அடித்துத் தனது புதிய தோற்றத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.
இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது, தன் காதலி மஹிகா சர்மாவுடன் கலந்துகொண்ட பாண்டியா, சுவாமி தரிசனம் செய்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
தரிசனம் முடித்துத் திரும்பிய இருவருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கி, ஸ்ரீவாரி தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.
மொட்டை தலையுடன் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கோயில் வளாகத்தில் பாண்டியாவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் மற்றும் செஃல்பி எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் மற்றும் வரவிருக்கும் சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களுக்கு முன்பாக, ஆன்மீகப் பயணமாகத் திருமலைக்கு வந்து பாண்டியா சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.