சினிமா செய்திகள்

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 'ஹேப்பி ராஜ்'

தந்தை மீதான சமூக உருவக் கேலியால் பாதிக்கப்பட்ட மகன், அதை கடந்து எப்படி 'ஹேப்பி'யாக மாறுகிறார் என்பதை உணர்வுபூர்வமான ஜாலி டிராமா பாணியில் சொல்லப்பட்டுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியான படம் ‘ஹேப்பி ராஜ்’.

அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கிய இந்தப் படத்தில், தந்தை மீதான சமூக உருவக் கேலியால் பாதிக்கப்பட்ட மகன், அதை கடந்து எப்படி 'ஹேப்பி'யாக மாறுகிறார் என்பதை உணர்வுபூர்வமான ஜாலி டிராமா பாணியில் சொல்லப்பட்டுள்ளது.

பியான்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், மற்றும் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஹேப்பி ராஜ்’ படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் வருகிற 24-ந்தேதி முதல் பிரபல ஓ.டி.டி. தளமான பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT