மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியார். இவர் 'சாக்ஷயம்' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர்.
திருமணதிற்கு முன்பு பல படங்களில் நடித்த இவர் திருமணதிற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
தமிழில் துணிவு, அசுரன், விடுதலை 2, வேட்டையன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்து வந்தார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
கடைசியாக ஆர்யாவுடன் சேர்ந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆக்ஷன் த்ரில்லர் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியார் 'ஹேப்பி லூப்’ என்ற புதிய மலையாள படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 'ஹேப்பி லூப்’ படத்தின் பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்களும் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களைக்கொண்டு 'வாழ' என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும் மஞ்சுவாரியரின் சகோதரரான மது வாரியர் மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.