சினிமா செய்திகள்

"அமரன்" பட பாடல் வரியை ஹார்டினுடன் பதிவிட்ட ஜி.வி.

ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

அமரன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஹே மின்னலே பாடலில் இடம்பெற்றுள்ள "எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே.." என்கிற காதல் வரியை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜி.வியின் இந்த பதிவுக்கும், அவரது இசைக்கும் லைக்ஸ்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Enge irul endraalum….. ange oli needhaaney ….✨✨✨✨❤️❤️❤️ #Amaran pic.twitter.com/waRKrM9ApM