சினிமா செய்திகள்

மகளுடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ் - வைரலாகும் வீடியோ!

தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது வீட்டில் தீபாவளியை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், இரவு நேரத்தில் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய வாணவேடிக்கையை ஜி.வி. பிரகாஷ் பற்ற வைக்கிறார். பின்னர் அங்கிருந்து ஓடி சென்று தனது மகள் அருகே நின்று வானத்தில் வண்ணமயமாக வெடிக்கும் வாணவேடிக்கையை ரசிக்கிறார்.

வானத்தில் சிதறிய வண்ண மின்னல்கள் மற்றும் அந்த கொண்டாட்டத்தின் உற்சாகம் அந்த வீடியோவில் அழகாக பதிவாகியுள்ளது. அருகில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தையுடன் அவர் சிரித்தபடி நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "செம்ம கியூட்", "ஹேப்பி தீபாவளி சார்" என கமெண்டுகளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT