அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் காமெடி ஜெர்னரில் உருவாகி உள்ளப் படம் ஹேப்பி ராஜ். மரிய ராஜா பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன், ஸ்ரீ கௌரி பிரியா, நடிகர் அப்பாஸ், ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் 'ஆடினே இருப்பேன்' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஜி.வி.பிரகாஷிற்கு இப்படம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.