ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஷ்வாசிகா, நட்டி சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் (மே.14) வெளியாக உள்ளநிலையில், நேற்று டிரெய்லர் வெளியானது.
இந்நிலையில் கருப்பு படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 14, 15 ஆகிய நாட்களில் ஒரு சிறப்புக் காட்சியை (காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள்) திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.