சினிமா செய்திகள்

நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்..!- வெங்கட் பிரபு X பதிவு

இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிபெரும்பான்மையான கட்சி என்கிற அந்தஸ்தை தவெக பெற்றுள்ளது.

ஆனால், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாததால் தவெக மற்ற கட்சிகளிடம் ஆதரவுக்கோரி தவித்து வருகிறது.

இதனால், விஜய் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் இருக்குமா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? என்கிற கேள்வி அவர்களின் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர்," நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT