சினிமா செய்திகள்

மலையாளிகளை கவர்ந்த குட் பேட் அக்லி... கேரளாவில் 2 மடங்கு அதிகரித்த திரையரங்க காட்சிகள்

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது.

மாலை மலர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி வெளியானது. அஜித் ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்தியாவில் ரூ.112 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படம் கேரளாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் 100 ஸ்கிரீன்களில் இருந்து 200 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.