பிரபலமான God of War வீடியோ கேம் தொடரின் அடுத்த பாகமாக "God of War: Laufey" என்ற புதிய கேமை, சோனியின் சான்ட்டா மோனிகா ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது விளையாட்டின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது. இந்த முறை, ரசிகர்கள் நீண்ட காலமாக பார்த்து வந்த கிராடோஸ் அல்ல, அவரது மனைவியும் அட்ரியஸின் தாயுமான ஃபேயே (Laufey) கதாநாயகியாக களமிறங்குகிறார். God of War Ragnarök விளையாட்டில் பேவாக நடித்த நடிகை டெபோரா அன் வோல் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் குரல் கொடுக்கிறார். இந்த முறை, கதையின் மையக் கதாபாத்திரமாக ஃபே செயல்படுகிறார்.
கேமின் டிரெய்லரின்படி, ஃபேயே தனது இறுதிச் சடங்குக்குப் பிறகு மர்மமான உலகில் விழித்தெழுகிறார். தனது குடும்பத்தை பாதுகாக்க முன்கூட்டியே செய்த திட்டங்கள் ஆபத்தில் இருப்பதை அறிந்த அவர், பல்வேறு புராணக் கடவுள்கள் நிறைந்த “Everywhen” எனும் மறுவுலகில் சாகசப் பயணத்தை தொடங்குகிறார். முந்தைய காட் ஆஃப் வார் விளையாட்டுகளின் சண்டை முறையிலிருந்து விலகி, இந்த கேமில் ஃபேயே மந்திர சக்திகள் மற்றும் அக்ரோபாட்டிக் போர் திறன்களுடன் போராடுகிறார். இதனால், விளையாட்டு அனுபவம் முற்றிலும் புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய காட் ஆஃப் வார் விளையாட்டுகளின் சண்டை முறையிலிருந்து விலகி, இந்த கேமில் ஃபேயே வேகமான அசைவுகள், மந்திர சக்திகள் மற்றும் அக்ரோபாட்டிக் போர் திறன்களுடன் போராடுகிறார். இதனால் விளையாட்டு அனுபவம் முற்றிலும் புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கேம் நார்ஸ் புராணங்களைத் தாண்டி எகிப்திய மற்றும் ஆசிய புராணக் கூறுகளையும் அறிமுகப்படுத்தலாம் என டிரெய்லர் சுட்டிக்காட்டுகிறது. இது காட் ஆஃப் வார் தொடரின் உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
PlayStation 5-க்காக உருவாகி வரும் இந்த கேமின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 20 நிமிடங்களுக்கு மேல் நீளமான டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஃபேயின் போர் பாணி மிகவும் கொடூரமானதாகவும், தீவிரமானதாகவும், இருக்கும். கிரேக்க காலத்தின் சில அம்சங்களுடன் நவீன நார்ஸ் அணுகுமுறையை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் வான்வழிப் போருக்கு இடையே தடையில்லாத மாற்றம், தாக்குதல் மற்றும் பாதுகாப்பு இரண்டுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காட் ஆஃப் வார் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.