சினிமா செய்திகள்

அனுஷ்கா- விக்ரம் பிரபு நடித்துள்ள காதி படத்தின் "தஸ்ஸோரா" சிங்கிள் வெளியானது

அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் 2ஆவது சிங்கிளான தஸ்ஸோரா வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT