தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களை இந்த வாரம் வெளியிடுகிறது இந்திய ஓடிடி தளங்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த ஓடிடிகளில் வெளியாகிறது என்பது குறித்து பார்ப்போம்..
சிறை (Sirai)- விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த விறுவிறுப்பான போலீஸ் த்ரில்லர் திரைப்படம் இன்று முதல் ஜீ5-ல் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மார்க் (Mark)- கிச்சா சுதீப் நடித்த இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
45- சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி நடித்த இந்த கன்னட பேண்டஸி ஆக்ஷன் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆன்மீகம் மற்றும் கர்மா சார்ந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்.
தேரே இஷ்க் மேன் (Tere Ishk Mein)- தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த இந்தித் திரைப்படம் இன்று முதல் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது 'ராஞ்சனா' (Raanjhanaa) பாணியில் ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை.
The Smashing Machine- டுவைன் ஜான்சன் (The Rock) நடித்த, எம்.எம்.ஏ (MMA) வீரர் மார்க் கெரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இன்று முதல் HBO Max ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஏ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ் (A Knight of the Seven Kingdoms) - 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதையின் முற்பகுதியான இது, கடந்த ஜனவரி 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதன் புதிய எபிசோட்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியாகும்.
வின்சென்ட் மஸ்ட் டை (Vincent Must Die)- ஆங்கிலத் த்ரில்லர் திரைப்படமான வின்சென்ட் மஸ்ட் டை ப்ரைம் வீடியோ ஓட்டி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சேப்டர் 2 (The Strangers: Chapter 2)- திகில் பட வரிசையான இதன் இரண்டாம் பாகம் தற்போது ஸ்டார்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.