தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவியா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸில் இன்று (நவ. 11) கோலாகலமாக நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரபலங்களில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜனிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தைத் தொடர்ந்து நவ.21ம் தேதி சென்னையில் வரவேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கிரீஸில் திருமணம் என்பது உறுதியானலும், இடம், நேரம் உள்ளிட்ட எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் ‘வாழ்நாளின் ஒரே வரம், என் வாழ்நாள் முழுமைக்கும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிருத் ரவிச்சந்தர்.