சினிமா செய்திகள்

ராமாயணா படத்தின் முதல் பாடல் வெளியானது!

படம் தீபாவளியை முன்னிட்டு நவ.6ம் தேதி வெளியாக உள்ளது.

ராமாயணா படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

குமார் விஸ்வாஸ் எழுதியுள்ள இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து பாடியுள்ளனர்.

ராமாயணம்

இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ராமாயணா.

சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம், இந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவ.6ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT