சினிமா செய்திகள்

ஜி.வி., கயாடு லோஹர் நடித்துள்ள இம்மார்டல் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர் மரியப்பா சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இம்மார்டல்.

இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா ஆகியோரும் உள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் லவ்வு லவ்வு காட்டேரி பாடல் வெளியாகி உள்ளது. வெளியீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT