செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானப் படம் கட்டா குஸ்தி. இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.
இரண்டாம் பாகத்தையும் செல்ல அய்யாவுவே இயக்க, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி மீண்டும் நடித்துள்ளனர். கட்டா குஸ்தி 2-ன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான சம்பவக்காரி வெளியாகி உள்ளது.
படம் வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.