சினிமா செய்திகள்

சந்தானத்தின் 'சாண்டா 20' பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு

சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சாண்டா 20’ என பெயரிடப்பட்டுள்ளது.

சந்தானத்தின் 20-வது படமான 'சாண்டா 20' பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். ரசிகர்கள் இந்த போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘இனிமே இப்படித்தான்’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் வெளியானது. ஹாரர் காமெடி திரைப்படமான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவு வசூலை குவித்தது.

சாண்டா 20

இதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சாண்டா 20’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘சாண்டா 20’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

SCROLL FOR NEXT