சினிமா செய்திகள்

சங்க பண முறைகேடு விவகாரம் - விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு

இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆலோசிக்க வேண்டும்.தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது முறைகேடு.

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க  கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.

இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை.

இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.