சினிமா செய்திகள்

VIDEO: பிறந்தநாளில் வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் - நன்றி தெரிவித்த சூர்யா

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியானது. கருப்பு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

:ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். அப்போது அவரது வீட்டின் பால்கனியில் இருந்து வெளியே வந்த சூர்யா கையசைத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

SCROLL FOR NEXT