சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் தம்பதி விவாகரத்து!

ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர்.ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபசும், பிரபல நடிகரான பென் அப்லெக்கும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தன.

இந்த நிலையில் பென் அப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெனிபர் லோபஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தாங்கள் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி முதல் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிபர் லோபஸ் விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார்.

ஜெனிபர் லோபசுக்கு பென் அப்லெக் 4-வது கணவர் ஆவார். இதற்கு முன்பு லோபஸ் நடிகர் ஓஜானி நோவா, நடனக் கலைஞர் கிறிஸ் ஜட் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை மணந்திருந்தார்.

இதேபோல் நடிகர் பென் அப்லெக், நடிகை ஜெனிபர் கார்னரை திருமணம் செய்திருந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

SCROLL FOR NEXT