நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ள புதிய மாயஜால ஃபேண்டஸி திரைப்படமான ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’- இன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யேலட்டி இயக்கியுள்ள இப்படத்தை பாகுபலி உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கால பைரவா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஃபகத் ஃபாசில் 'சூரி' என்ற கதாபாத்திரத்திலும், குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர் 'திவ்யா' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படம் அக்டோபர் 2ம்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழ் டிரெய்லருக்கு நடிகர் கமல்ஹாசனும், மலையாளத்திற்கு நடிகர் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு விசித்திரமான மந்திரவாதியான 'சூரி' (ஃபகத் ஃபாசில்), ஒரு சிறுமிக்குத் தனது வித்தைகளைக் காட்டும்போது தற்செயலாக ஒரு மந்திரத்தை ஓதி அவளை மறையச் செய்கிறார்.
அந்தச் சிறுமி உண்மையில் நினைத்ததை நடத்தும் பேராற்றல் கொண்ட ஒரு 'ஜீனி'என்பது பின்னர் தெரியவருகிறது. அவள் தனது மாயாஜால சக்திகளால் ஊரையே தலைகீழாக மாற்ற, இதனால் சூரி சந்திக்கும் சுவாரசியமான, நகைச்சுவையான மற்றும் ஆபத்தான சாகசங்களே இப்படத்தின் கதையாகும்.