சினிமா செய்திகள்

இந்திய சினிமாவின் இரு சூப்பர் ஸ்டார்களுடன் பகத் பாசில்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு வேட்டையன் படக்குழு வாழ்த்து பகத் பாசில் புகைப்படத்தை வேட்டையன் படக்குழு பகிர்ந்துள்ளது.

மாலை மலர்

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். இந்த அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வேட்டையன் படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது.

தற்போது ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் என்ற இரு சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வேட்டையன் படக்குழு பகிர்ந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.