ஃபஹத் பாசில் நடிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் சென்னை உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.
இந்நிகழ்வில் ராஜமௌலி, கார்த்திகேயா, ஃபஹத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா, எடிட்டர் பிரவீண் ஆண்டனி ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் கலந்து கொண்டனர்.
இப்படம் குறித்து தங்களது கருத்துக்களை விழா மேடையில் படக்குழுவினர்கள் உறையற்றினார்கள்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ஈ'யை வைத்து பிரம்மாண்டத்தை காட்டிய ராஜமௌலியின் முத்திரையில் வரும் படம் இது. குடும்ப ரசிகர்களுடன் இணைந்து பார்க்கும் படமாக இருக்கும். இது 3D-யில் வந்திருக்க வேண்டிய படம் என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா இப்படத்தை பற்றி பேசுகையில், இது எங்கள் நிறுவனத்தின் முதல் படம். நேர்மையான, இனிமையான படம். இரண்டாம் பாதியில் உள்ள எமோஷன் அனைவரையும் கவரும் என்று பேசினார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் ராஜமௌலி கூறும்போது, இந்த படத்தின் கதையை ஒரே வாக்கியத்தில் சொன்னார் - 'ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை'. அதுவே எனக்கு பிடித்துவிட்டது. ஃபஹத் இந்த படத்தின் ராஸ்கல்.
முதல் பிரதியை பார்க்கும்போது அழுதேன், சிரித்தேன் என்றார். மேலும் தமிழ் ட்ரெய்லருக்கு குரல் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
இப்படத்தின் கதை நாயகனாக நடிக்கிறார் ஃபஹத் பாசில். இதுகுறித்து விழா மேடையில் பேசிய ஆவர், இதுவரை இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை. தெலுங்கில் எனக்கு இதுவரை பெரிய ஓப்பனிங் இல்லை, இந்த படம் அதை மாற்றும். குழந்தை நட்சத்திரம் சாரா என்னை விட அர்ப்பணிப்புடன் நடித்தார் என்றும் கூறினார்.
இப்பட ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ஃபஹத் - ராஜமௌலி - கார்த்திகேயா கூட்டணி யாரும் எதிர்பாராத காம்பினேஷன். ஃபஹத் கதாபாத்திரத்திற்காக மட்டுமே யோசிப்பவர், கணக்கு போட மாட்டார்.
இது பெரியவர்களுக்கான குழந்தைகள் படம். ராஜமௌலி சாரின் படத்தில் ஒரு நிமிடம் நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் நன்றி என்றும் கூறினார்.
அக்டோபர் 2-ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கும்படி படக்குழு அழைப்பு விடுத்துள்ளது.