சினிமா செய்திகள்

‘ஏழு கடல் ஏழு மலை’ டிரெய்லர் வெளியானது!

படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி, வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

டிரெய்லரின்படி, 8000 ஆண்டுகளாக இறப்பே இல்லாமல் வாழ்ந்து வரும் ஒரு நபர், ரயிலில் இயல்பான மனிதர் ஒருவரை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பால் உருவாகும் குழப்பங்களையும், அதனால் வெளிவரும் இறப்பில்லா மனிதனின் வாழ்க்கை வரலாறுமே படம்.

ரிச்சி படத்திற்குப் பிறகு நிவின் பாலி ஏழு கடல் ஏழு மலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்புகிறார். கற்றது தமிழ், பேரன்பு படங்களைத் தொடர்ந்து அஞ்சலி இயக்குநர் ராமுடன் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT